Hemalatha Mani

             நன்றி மறந்த ஹேமலதா 

வளைந்த மூக்கு ,அழுக்கேறிய தலை , சரியான உணவில்லாத தேகம் ,  முகத்தில் வறுமை யுடன் ப்ளஸ் டு தேர்வு எழுதியிருக்கிறேன் ஏதேனும் வேலை கிடைக்குமா ஹேமலதா https://www.facebook.com/hemalatha.mani23 என்ற ஒரு சிறுமி 2010 ஏப்ரல் மாதத்தின் ஒரு நாள் மாலையில் நான் என் மருந்தகத்தில் இருக்கும் போது கேட்டார் . அவரது வறுமை நிலையைக் கண்டு அவருக்கு எனது நிறுவனத்தில் சேல்ஸ் கேர்ள் வேலை போட்டுக் கொடுத்தேன் . சிறிது நாள் கழித்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தன . 1035 மார்க்குகள் எடுத்திருந்தார் . கண்களில் நீர் . பெற்றோர்களுக்கு வசதியில்லை , எனது சகோதரிகளை தான் படிக்க வைக்கிறார்கள் என்னை படிக்க வைப்பதற்கு அவர்களுக்கு  விருப்பமில்லை . மேலும் அவர்கள் எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள்   எப்படியாவது கல்லூரியில் சேர்ந்து மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று சொன்னார் . எனக்கு தெரிந்த அணைத்து கல்வி நிதி உதவிகள் அளிக்கும் பலரிடம் தொடர்பு கொண்டோம் . 

mark sheet 
 எனது மருந்தகத்திற்கு வாடிக்கையாளராகவும் , நெருங்கிய நண்பராகவும் உள்ள SRM பல்கலைக் கழக இயக்குனரை சந்தித்து அவரிடம் இப்பெண்ணின் நிலையை விளக்கி சொல்ல அப்போது அக்கல்லுரியில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு வழங்கும் உயர் கல்வி திட்டத்தின் கீழ் விண்ணப்பியுங்கள் நான் ஆவண செய்கிறேன் என்று சொன்னார் . அப்போது நான் SRM குழுமத்தின் இந்திய ஜனநாயக கட்சியில் கட்சி பதவியில் இருந்தேன் . கட்சி மற்றும் இயக்குனரின் சிபாரிசில் BE பயோ மெடிக்கல் பிரிவில் 4 வருடமும் இலவச கல்வி மற்றும் அதற்கு தேவையான புத்தகங்கள் அணைத்து சிலவுகளையும் அவர்கள் அறக்கட்டளை மூலமாக இலவசமாகவே SRM University யில் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள் .

request letter 
கல்லூரி க்கு செல்வதற்கு கூட சரியான ட்ரஸ் இல்லை . மீண்டும் எனது நண்பர்களிடம் படையெடுத்து அவர்களின் உதவியோடு அவருக்கு தினம் அணியக கூடிய 5 செட் ட்ரஸ்க்களை வாங்கிக் கொடுத்து கல்லூரிக்கு அனுப்பினோம் . 4 வருடமும் BE  படித்து முடித்து  மேல் படிப்பு படிக்க தைவான் நாட்டில் உள்ள HUALIEN சிட்டி சென்றார் . அதற்கும் அக்கல்லுரியே அணைத்து உதவிகளையும் செய்தது . அங்கும் மேல் படிப்பு முடித்தார் . இப்போது 6 இலக்கங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார் . 
income certificate 
‘சாலைகள் வைப்பதில், அன்ன சத்திரங்கள் அமைப்பதில், குளம் வெட்டுவதில், கோவில்கள் கட்டுவதில் கிடைக்கும் புண்ணியங்களை விட ஆயிரம் பங்கு அதிகமான புண்ணியம் ஓர் ஏழைக்கு எழுத்தறிவு தருவதால் கிடைக்கும்’ என்று பாரதி கூறியதை கண்களால் பார்த்த ஒரு மன நிறைவு கிடைத்தது . 

இவர் பெற்றோர் கூட இவருக்கு கல்வி அளிப்பதற்கு எதிர்ப்பு காண்பித்தார்கள் எதிர்ப்பையும் மீறி இவர் அரசு பள்ளியில் படித்திருந்தாலும் சென்னையின் நம்பர் ஒன் கல்லூரியில் 18 லட்சம் ரூபாய்  மதிப்புள்ள படிப்பு , உணவு புத்தகங்கள் . லேப்டாப் உட்பட இலவசமாக அளிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தேன் . ஆனால் ஹேமலதா கல்லூரி சேரும்போது   வந்தவர் அதற்குப்பின் இன்று வரை என்னை  பார்க்கவுமில்லை , பேசவுமில்லை , நன்றி சொல்லவும் வரவில்லை / இந்த ஊரில் தான் அவர் வீடு இருக்கிறது . வருடத்திற்கு மூன்று முறை வெளி நாட்டில் இருந்து வருகிறார் போகிறார் , நான் கொடுத்த கலவியினால் அவர் சகோதரிகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ளார் . ஆனால் வழி காட்டியவருக்கு எந்தவொரு நன்றியோ , எந்தவொரு சன்மானமோ , இவர்  பெற்ற இலவசக்கல்வி போல அடுத்தவர் ஒருவருக்கு கலவியறிவையோ அளித்திடவில்லை . அந்தளவிற்கு சுயநலத்துடனும் தற்குரியாகவும் , நன்றி மறந்தவராகவும் இருக்கிறார்கள் . இவர்களுக்கெல்லாம் இறைவன் நல்ல புத்தி சொல்ல  வேண்டும் .  கிருஷ்ணார்ப்பணம் . - இராமநாதன் C


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்